sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்றுகிறேன்: பிரதமர் மோடி

/

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்றுகிறேன்: பிரதமர் மோடி

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்றுகிறேன்: பிரதமர் மோடி

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்றுகிறேன்: பிரதமர் மோடி

4


UPDATED : நவ 26, 2024 09:45 PM

ADDED : நவ 26, 2024 09:41 PM

Google News

UPDATED : நவ 26, 2024 09:45 PM ADDED : நவ 26, 2024 09:41 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது கடமைகளைச் செய்கிறேன், '' என பிரதமர் மோடி கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டில் நடந்த அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு மற்றும் நாட்டின் தேவைக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்பு உள்ளது. காஷ்மீரில் அம்பேத்கரின் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதல்முறையாக அங்கு, அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இன்று இந்திய பெரிய அளவிலான மாற்றத்தை நோக்கி சென்று கொண்டு உள்ளது. அதற்கு இந்திய அரசியலமைப்பு நம்மை வழிநடத்துகிறது. நமக்கு ஒளிவிளக்காக திகழ்கிறது.

அரசியல் நிர்ணய சபை விவாதத்தின் போது '' அரசியலமைப்பு என்பது வெறும் வழக்கறிஞரின் ஆவணம் இல்லை'' என்று அம்பேத்கர் கூறினார். இன்று இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு. இது நாட்டின் பெருமைக்குரிய விஷயம். அரசியலமைப்புக்கும், அரசியலமைப்பு சபைகளுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்த தினம் இன்று. அப்போது உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இந்தியாவின் பாதுகாப்புக்கு சவால்விடும் பயங்கரவாத அமைப்புகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்ற இந்தியாவின் தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை பார்த்தோம். ஜனநாயகம் முன்பு எழுந்த சவாலை அரசியலமைப்பு எதிர்கொண்டது. இதுதுான் நமது அரசியலமைப்பின் பலம். காஷ்மீரில், அம்பேத்கரின் அரசியலமைப்பு முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதல்முறையாக காஷ்மீரில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

அரசியலமைப்பின் அசல் புத்தகத்தில் கடவுள் ராமர், சீதையின் உருவங்கள் அதில் உள்ளன. இந்த படங்கள் இந்திய கலாசாரத்தை பிரதிபடுத்துபவை. இவை எப்போதும் மனித மாண்புகளை நினைவுபடுத்துகிறது. இந்த மாண்புகளே இன்றைய இந்தியாவின் கொள்கை மற்றும் முடிவுகளுக்கு அடிப்படையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நினைவுப்பரிசு

திஹார் சிறையில் உள்ள கைதி வரைந்த ஓவியத்தை, பிரதமர் மோடிக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நினைவுப்பரிசாக வழங்கினார்.






      Dinamalar
      Follow us