sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உ.பி.,யில் இறந்த நதிக்கு உயிர்கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி

/

உ.பி.,யில் இறந்த நதிக்கு உயிர்கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி

உ.பி.,யில் இறந்த நதிக்கு உயிர்கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி

உ.பி.,யில் இறந்த நதிக்கு உயிர்கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி

10


UPDATED : ஆக 01, 2024 01:43 PM

ADDED : ஆக 01, 2024 12:28 PM

Google News

UPDATED : ஆக 01, 2024 01:43 PM ADDED : ஆக 01, 2024 12:28 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உ.பி.,யில் சம்பய் மாவட்டத்தில் இறக்கும் நிலையில் இருந்த நதி ஐ.ஏ.எஸ்., அதிகாரி முயற்சியால் சீரமைக்கப்பட்டது.

குடிநீர் ஆதாரம்


உ.பி., மாநிலம் சம்பய் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக சோட் என்ற நதி இருந்தது. கங்கை நதியின் துணை நதியாக இது இருந்தது. அம்ரோஹா மாவட்டத்தில் துவங்கி 110 கி.மீ., தூரம் பயணித்து பதுவான் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. அம்மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய தேவையை பூர்த்தி செய்வதாகவும் திகழ்ந்தது. ஆனால், நாட்போக்கில் ஆக்கிரமிப்பு காரணமாகவும், அதனை ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாத காரணத்தினாலும் இந்த நதி ஓடையை போல் சுருங்கி இறக்கும் தருவாயில் இருந்தது. விவசாயிகள் நிலத்தடிநீரை பயன்படுத்த துவங்கினர். இதனால், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றது. இது அப்பகுதி மக்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.

4 கட்டம்

இந்நிலையில், மணீஷ் பன்சால் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். நதி இறக்கும் நிலையில் இருந்தது அவரின் கவனத்திற்கு சென்றது. அந்த நதியை உயிர்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து 4 கட்டங்களாக புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.

முதல் கட்டமாக, நதியின் இயற்கையான நீரோட்டம் ஆய்வு செய்யப்பட்டது.

இரண்டாவதாக, நதியின் நீளம், அகலம் பற்றி அறிந்து எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது.

3வதாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

4வதாக ஆற்றில் இருந்த மணல் அகற்றப்பட்டு, அது புதுப்பிக்கப்பட்டது. ஆற்றை தூய்மைப்படுத்தி, ஆழப்படுத்த தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மரக்கன்று


இதன் காரணமாக, ஆற்றை புதுப்பிப்பதற்காக டிச.,2022 ல் துவங்கிய பணி 6 மாதங்களில் 2023 ஜூன் மாதம் நிறைவு பெற்றது. இதன் காரணமாக, கடந்த பருவமழை காலத்தில் நதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி, அதன் பழைய நிலையை எட்டியது. அப்பகுதியில் தண்ணீர் தேங்குவதும் தடைபட்டது.மேலும் நதிக்கரையோரம் எதிர்காலத்தில் மண்சரிவு ஏற்படாமல் இருக்க மூங்கில் மரக்கன்று நடப்பட்டது.

பிரதமர் பாராட்டு


மாவட்ட கலெக்டரின் இந்த பணியை 2023 செப்., மாதம் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி பேசினார். இந்த திட்டத்தின் வெற்றியை மக்களுக்கும், மாவட்ட ஊழியர்களுக்கும் சமர்ப்பித்த கலெக்டர், கடந்த ஜூன் மாதம் வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோன்ற சிறப்பான பணியை செய்ய வேண்டும் என அம்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us