சமூக ஊடகங்களில் ஆபாச பதிவுகள்; கடுமையான சட்டம் தேவை என்கிறார் அஸ்வினி வைஷ்ணவ்!
சமூக ஊடகங்களில் ஆபாச பதிவுகள்; கடுமையான சட்டம் தேவை என்கிறார் அஸ்வினி வைஷ்ணவ்!
ADDED : நவ 28, 2024 10:03 AM

புதுடில்லி: 'சமூக ஊடகங்களில் ஆபாசமான பதிவுகளை கட்டுப்படுத்த இன்னும் கடுமையான சட்டம் தேவை' என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லோக்சபாவில் விவாதத்தின் போது,சமூக ஊடகங்களில் ஆபாசமான பதிவுகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து எம்.பி அருண் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: நாங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் OTT தளங்களில் வக்கிரமான, ஆபாசமான பதிவுகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சமூக ஊடகங்கள் பத்திரிகை சுதந்திரத்திற்கான ஒரு ஊடகம். ஆனால் அது கட்டுப்பாடற்ற வெளிப்பாட்டிற்கான இடமாக மாறி உள்ளது. இதில் பெரும்பாலும் வக்கிரமான, ஆபாசமான பதிவுகள் அதிகம் உள்ளது.
கடுமையான சட்டம்
தற்போதைய சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சமூகவலைதளத்தில் இடம்பெற்று வரும் ஆபாச காட்சிகளை தடுப்பதற்கு ஏற்கனவே உள்ள சட்டங்களை கடுமையாக்குவது இந்தியாவிற்கு இன்றியமையாததாக அமைந்துள்ளது. இந்த பிரச்னைகள் குறித்து, பார்லிமென்ட் நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற விவாதங்கள் உலகில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் நடத்தப்படுகின்றன. இந்த சவாலை எதிர்கொள்ள கடுமையான சட்டங்களுடன், மக்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.