தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு

இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு

இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு


ADDED : அக் 21, 2025 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2025 05:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூணாறு: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை அக்., 16ல் முடிவுக்கு வந்த பிறகும் மழை தொடர்கிறது. இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

பாலக்காடு மாவட்டத்தில் மீங்கரா, வாளையாறு, மலம்புழா, போத்துண்டி, சுள்ளியாறு, மங்கலம் ஆகிய அணைகள், இடுக்கி மாவட்டத்தில் ஆனயிறங்கல், குண்டளை, கல்லார்குட்டி, இரட்டையாறு, லோயர் பெரியாறு, கல்லார் ஆகிய அணைகள் ஆகியவற்றில் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்குவதால் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டது.

நெடுங்கண்டம் அருகே கல்லாறு, கூட்டாறு ஆகிய ஆறுகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கூட்டாறு ஆற்றின் குறுக்கே கருணாபுரம், பாம்பாடும்பாறை ஆகிய ஊராட்சிகளை இணைக்கும் பழமையான பாலம் சேதமடைந்தது.

முல்லைப்பெரியாறு அணையில் 13 ஷட்டர்கள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் பெரியாற்றில் கலந்து இடுக்கி அணையை வந்தடையும். அதனால் இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று மதியம் 1:00 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 434 அடியாக இருந்தது. இதே கால அளவில் கடந்தாண்டு நீர்மட்டம் 372.78 அடியாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us