காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம் நடக்கும்: அமித்ஷா எச்சரிக்கை
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம் நடக்கும்: அமித்ஷா எச்சரிக்கை
ADDED : ஏப் 21, 2024 05:49 PM

கதிஹர்: காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் பயங்கரவாத விவகாரங்களில் மென்மையான போக்கை கடைபிடிப்பதாகவும், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் வறுமை, கலவரம் மற்றும் அட்டூழியங்கள் அதிகரிக்கும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
பீஹாரின் கதிஹரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடி, நாட்டில் நக்சலைட்களை ஒழித்து, பயங்கரவாதத்தை ஒடுக்கி உள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு யாரும் பதிலடி கொடுக்கவில்லை. இதற்கு மாறாக, பாலக்கோட் மற்றும் உரியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு சர்ஜிக்கல் தாக்குதல் மற்றும் பாலக்கோட்டில் விமானப்படை தாக்குதல் என இந்தியா பதிலடி கொடுத்தது. நமது பாதுகாப்பு படையினர் எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாதிகளை அவர்களது மறைவிடத்திலேயே அழித்தனர்.
காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வறுமை, அட்டூழியம், வறுமை மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும். தே.ஜ., கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்கும் போது இரட்டை இன்ஜீனின் அரசினால் கிடைக்கும் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். ‛ இண்டியா ' கூட்டணி பீஹாரை கற்காலத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

