திமுக அமைச்சர்கள் சொத்தை வித்தாலே, தமிழகத்தின் கடனை அடைத்துவிடலாம்: எச்.ராஜா பேட்டி
திமுக அமைச்சர்கள் சொத்தை வித்தாலே, தமிழகத்தின் கடனை அடைத்துவிடலாம்: எச்.ராஜா பேட்டி
ADDED : பிப் 17, 2024 03:24 PM

புதுடில்லி: 'திமுக அமைச்சர்கள் சொத்தை கையகப்படுத்தி வித்தாலே தமிழகத்தின் 8 லட்சம் கோடி கடனை அடைத்து விடலாம்' என டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
பா.ஜ.,வின் தேசிய குழு கூட்டம் டில்லியில் இன்று துவங்கியது. அங்குள்ள பாரத் மண்டபத்தில் கட்சியின் தேசிய தலைவர் .நட்டா தலைமையில் இரண்டு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்றைய தினம் உறுதியாக பா.ஜ., அரசுதான் மூன்றாவது முறையும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், தேசியக்குழு கூட்டம் கூடியுள்ளது. இதனால் பா.ஜ.,வினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.,.கூட்டணி குறித்து நிலவி வரும் சந்தேகங்கள் இன்னும் 60 நாட்களில் தீரும். தினமும் ஒரு திமுகவின் மூத்த அமைச்சர் கோர்டில் குட்டு வாங்குகிறார் அல்லது அமலாக்கத்துறை இடம் மாட்டி கொள்கிறார். திமுக அமைச்சர்கள் சொத்தை கையகப்படுத்தி வித்தாலே, தமிழகத்தின் 8 லட்சம் கோடி கடனை அடைத்து விடலாம். தமிழகத்தில் பா.ஜ.,விற்கு பெரும் ஆதரவு உண்டு. இவ்வாறு எச்.ராஜா கூறினார்.