sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் கமிஷன் முதலில் சத்தியப்பிரமாணம் தாக்கல் செய்யணும்: சொல்கிறார் காங் தலைவர்

/

தேர்தல் கமிஷன் முதலில் சத்தியப்பிரமாணம் தாக்கல் செய்யணும்: சொல்கிறார் காங் தலைவர்

தேர்தல் கமிஷன் முதலில் சத்தியப்பிரமாணம் தாக்கல் செய்யணும்: சொல்கிறார் காங் தலைவர்

தேர்தல் கமிஷன் முதலில் சத்தியப்பிரமாணம் தாக்கல் செய்யணும்: சொல்கிறார் காங் தலைவர்

2


ADDED : ஆக 18, 2025 06:05 PM

Google News

2

ADDED : ஆக 18, 2025 06:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' வாக்காளர் பட்டியல் குளறுபடி இல்லாமல் இருக்கிறது என தேர்தல் கமிஷன் சத்தியப் பிரமாணம் தாக்கல் செய்தால், நாங்களும் அதனை செய்கிறோம், '' என காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகோய் கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று(ஆகஸ்ட் 17) தேர்தல் கமிஷனர்கள் ஓட்டுத் திருட்டு தொடர்பாக விரிவாக விளக்கம் அளித்தனர். அப்போது ஓட்டுத் திருட்டு தொடர்பாக தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் சத்தியப் பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும். அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைமைத் தேர்தல் கமிஷனர் கூறியிருந்தார்.

இந்நிலையில், டில்லியில் ' இண்டி' கூட்டணியை சேர்ந்த காங்கிரசின் கவுரவ் கோகோய், சமாஜ்வாதியின் ராம்கோபால் யாதவ், திரிணமுல் காங்கிரசின் மஹூவா மொய்த்ரா, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பேட்டி கொடுத்தனர்.

அப்போது, கவுரவ் கோகோய் கூறியதாவது: தீவிரமான பிரச்னைகள் குறித்து விளக்கமளிக்க தேர்தல் கமிஷன் மறுத்துவிட்டது. மஹாராஷ்டிராவில் கூடுதல் ஓட்டுகள் சேர்க்கப்பட்டது, மஹாதேவ்புராவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு, வீடியோ பதிவு அழிப்பு குறித்து விளக்கம் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்காத அதிகாரிகளின் கைகளில் தேர்தல் கமிஷன் உள்ளது. வாக்காளர் பட்டியல் தெளிவாக உள்ளது என தேர்தல் கமிஷன் முதலில் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். பிறகு நாங்கள் கட்டுப்படுகிறோம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்க வேண்டிய தேர்தல் கமிஷன் நேற்று அரசியல் கட்சிகளிடம் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் மவுனம் காக்கிறது. லோக்சபா தேர்தல் மற்றும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு இடையே 70 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்தும் மவுனமாக உள்ளது. பாரபட்சம் பார்க்கும் அதிகாரிகளின் கைகளில் தேர்தல் கமிஷன் உள்ளது தெளிவாக தெரிகிறது என்றார்.

மஹூவா மொய்த்ரா கூறும்போது, போலி வாக்காளர் அடையாள அட்டை குறித்து முதல்வர் மம்தா கேள்வி எழுப்பினார். ஆனால், இந்த பிரச்னை இன்னும் சரி செய்யப்படவில்லை. மோசடியான வாக்காளர் பட்டியல் தயாரித்த முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். லோக்சபாவை உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்றார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் அர்விந்த் சாவந்த் கூறியதாவது: தலைமைத் தேர்தல் கமிஷனரின் நடவடிக்கையை பார்க்கும்போது, அவர் பாஜ செய்தித் தொடர்பாளர் ஆக செயல்படுவது போல் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us