sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பேச வாய்ப்பு தந்தால் வெளிநாடுகளுக்கு ஓடி விடுகிறீர்கள்:ராகுல் மீது அமைச்சர் அமித் ஷா நேரடி 'அட்டாக்'

/

பேச வாய்ப்பு தந்தால் வெளிநாடுகளுக்கு ஓடி விடுகிறீர்கள்:ராகுல் மீது அமைச்சர் அமித் ஷா நேரடி 'அட்டாக்'

பேச வாய்ப்பு தந்தால் வெளிநாடுகளுக்கு ஓடி விடுகிறீர்கள்:ராகுல் மீது அமைச்சர் அமித் ஷா நேரடி 'அட்டாக்'

பேச வாய்ப்பு தந்தால் வெளிநாடுகளுக்கு ஓடி விடுகிறீர்கள்:ராகுல் மீது அமைச்சர் அமித் ஷா நேரடி 'அட்டாக்'

8


UPDATED : மார் 11, 2026 10:54 PM

ADDED : மார் 11, 2026 10:52 PM

Google News

UPDATED : மார் 11, 2026 10:54 PM ADDED : மார் 11, 2026 10:52 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது டில்லி நிருபர் -

''பார்லிமென்ட் வருகை பதிவேட்டில் ராகுலின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. கூட்டத்தொடர் நடக்கும்போது ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போய் விடுகிறார். உண்மை இப்படியிருக்க, பார்லிமென்ட்டில் என்னை பேசவே விடுவதில்லை எனக்கூறுவது என்ன நியாயம்?,'' என, மத்திய அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவரை நேரடியாகவே விமர்சித்தது லோக்சபாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

லோக்சபாவில், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முடிவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியதாவது:விதிகளை நிலைநாட்டுவதுதான், சபாநாயகரின் தலையாய பணி. லோக்சபாவில், அவரது முடிவுதான் இறுதியானது. அவரது நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டது. அது குறித்து கேள்வி எழுப்ப கூடாது. இந்த தீர்மானமே, அந்த பதவியை இழிவுபடுத்தவதாக உள்ளது. இதன்மூலம், அவரை எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அவமானப்படுத்தியுள்ளனர். இது கண்டனத்திற்குரியது.

ஆனாலும், இந்த தீர்மானத்தை கொண்டுவர, எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உள்ளது. காரணம், தற்போது எமர்ஜென்சி போன்ற நெருக்கடி நிலை இல்லை.சபை விதிகளை, இஷ்டம்போல எதிர்க்கட்சிகள் வளைக்கின்றன. காங்கிரஸ் காலத்தில், விதிகள் எல்லாம் எப்படி மீறப்பட்டன என்பதை விவாதிக்க தயார். காங்கிரசின் விதிகளைக் கொண்டு, சபையை நடத்த முடியாது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள், அனைத்துமே பொய்யானவை.

பார்லிமென்ட்டில் பேசுவதற்கு நேரமும் வாய்ப்பும் கிடைக்கும்போதெல்லாம், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார். நாங்கள் என்ன செய்வது? பார்லிமென்ட்டில் பேசுவதை விட்டுவிட்டு, ஜெர்மனிக்கு ஓடி விடுகிறார் ராகுல். ஜனாதிபதி உரைக்கு கூட வரவில்லை. பதிவேட்டின்படி, ராகுலின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. அரசிலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மற்றும் முக்கியமான விவாதங்கள் நடந்த போதெல்லாம் ராகுல் பங்கேற்கவில்லை.

ஒவ்வொக ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும்போதெல்லாம், பிரிட்டன், சிங்கப்பூர், ஜெர்மனி என சுற்றிக் கொண்டே இருந்தால், உங்களால் பார்லிமென்ட்டில் எப்படி பேச முடியும்? வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்காக, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாகவா, பேச வாய்ப்பு ஏற்படுத்தி தர முடியும்? உண்மை இப்படியிருக்க, பார்லிமென்ட்டில் பேசுவதற்கு உங்களை யார் தடுத்தது? நாங்கள் உங்களை தடுத்தோம் என்று கூறினால் அது எப்படி நியாயம் ஆகும்?இவ்வாறு அவர் பேசினார்.

இறுதியாக, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு, தோற்கடிக்கப்பட்டது.

என்னை பேச அனுமதிக்கவில்லை: ராகுல்

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது:இந்த சபையில் ஒவ்வொரு முறையும் நான் எழுந்து பேசும்போதெல்லாம், சபாநாயகரால் தடுக்கப்படுகிறேன். நான் சில அடிப்படை கேள்விகளைத்தான் எழுப்பினேன். நாட்டு நலனுக்கு எதிராக பிரதமர் முற்றிலுமாக சமரசம் செய்துகொண்டுவிட்டார்.வரலாற்றிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத் தளபதி நராவனே குறித்தும், 'எப்ஸ்டீன் பைல்' குறித்தும் பேச முயற்சித்தேன். ஆனால், நான் பலமுறை தடுக்கப்பட்டேன். இதன்மூலம், எவ்வளவு தூரம் இந்த பிரச்னைகளில் எல்லாம், பிரதமர் சமரசம் செய்துள்ளார் என்பது தெளிவாகிறது.இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us