ADDED : மார் 21, 2024 03:12 AM

துமகூரு: ''லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்றால், மாநிலத்தில் ஆட்சி நடத்தி பிரயோஜனம் இல்லை,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா தெரிவித்தார்.
துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அனைத்துக் கட்சிகளுக்கும் சென்று மீண்டும் காங்கிரசில் சேர்ந்த முத்தஹனுமேகவுடாவை வேட்பாளராக்கி உள்ளோம். வேறு வேட்பாளர் இல்லாததால் அவரை நிறுத்த வேண்டும். இது கடினமான தேர்தல் என்பதால் நிறுத்தி உள்ளோம்.
கடந்த தேர்தலில் தேவகவுடாவை தோற்கடிக்க, மக்கள் ஓட்டளித்தனர். தேவகவுடா ஒரு போதும் மதச்சார்பற்றவர் அல்ல. பேரக்குழந்தைகள் ஒரு புறமும்; மருமகன் ஒருபுறமும் நிற்கின்றனர். அப்படியானால், ம.ஜ.த.,வில் வேறு யாரும் இல்லையா?
கடந்த 20 ஆண்டுகளாக ஹாசனில் காங்கிரஸ் பிரதிநிதி இல்லை. இம்முறை காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
துமகூரில் 1996 முதல் நடந்த அனைத்துத் தேர்தலில் வெளியாட்களுக்கு, மாவட்ட மக்கள் வாய்ப்பு மறுத்து வந்தனர்.
லோக்சபா தேர்தலில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்றால், கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

