ADDED : பிப் 08, 2025 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி'வந்தே பாரத்' ரயில்களில் பணம் கொடுத்தால் உணவு வழங்கும் வசதி அறிமுகமாகிறது.
இதுகுறித்து ரயில்வே வாரியம் கூறியதாவது:
வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவின்போது, உணவு விருப்பத்தை தேர்வு செய்யாமல் பயணம் செய்யும்போது, சில பயணியர் உணவு கேட்பதால், அடிக்கடி பிரச்னை எழுகிறது.
பணம் கொடுத்தும் ஐ.ஆர்.சி.டி.சி., ஊழியர்கள் உணவு தர மறுப்பதாக பயணியரிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருவதால், டிக்கெட் முன்பதிவில் உணவு விருப்பத்தை தேர்வு செய்யாவிட்டாலும் கூட, ரயில் பயணத்தின்போது, பணம் கொடுத்து உணவை பெறும் வசதி, வந்தே பாரத் ரயில்களில் அறிமுகமாகிறது.
ரயில் பயணியருக்கு தரமான உணவை வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி, ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ரயில்வே வாரியம் தெரிவித்துஉள்ளது.