டில்லியில் ஐ.எப்.எஸ்., அதிகாரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
டில்லியில் ஐ.எப்.எஸ்., அதிகாரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
ADDED : மார் 07, 2025 01:03 PM

புதுடில்லி: டில்லி சாணக்யபுரி வீட்டில் இருந்த ஐ.எப்.எஸ்., அதிகாரி ஜிதேந்திர ராவத், 40, இன்று (மார்ச் 07) காலை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
டில்லி சாணக்யபுரியில் ஐ.எப்.எஸ்., அதிகாரி ஜிதேந்திர ராவத் வசித்து வந்தார். இவருக்கு வயது 40. இவர் இன்று காலை 6 மணிக்கு மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யார் இந்த ஜிதேந்திர ராவத்
* உத்தரகண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஜிதேந்திர ராவத். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
* இவரது மனைவி மற்றும் குழந்தைகள் டேராடூனில் வசிக்கின்றனர். இவர் சிறிது காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
* டில்லியில் தனது தாயார் உடன் ஜிதேந்திர ராவத் வசித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: அந்த அதிகாரி பல நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். அவரது விபரீத முடிவிற்கு தெளிவான காரணம் தெரியவில்லை.
அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் எங்களுக்கு காலையில் வந்தது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.