ADDED : ஏப் 20, 2026 02:35 AM

தற்போதுள்ள லோக்சபா இடங்களின் படி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், நான் எம்.பி.,யாக உள்ள தமிழகத்தின் விருதுநகர் தொகுதியை ஒரு சகோதரிக்காக விட்டுக் கொடுப்பேன். ஆனால், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கள் வாரணாசி, காந்திநகர் தொகுதிகளை விட்டுக் கொடுக்க தயங்குவது ஏன்?
மாணிக்கம் தாகூர் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
நடத்தை விதிமீறல்!
தமிழகம், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மகளிர் மசோதா தோல்வியடைந்தது குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, தி.மு.க., திரிணமுல் காங்., கட்சிகளை குறிப்பிட்டு பெண் வாக்காளர்களை துாண்டிவிட்டுள்ளார். பிரதமரே தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் ஜனநாயகத்தின் கதி என்னவாகும்.
அசோக் கெலாட் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்
கருப்பு தினம்!
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, லோக்சபா இடங்களை 850 ஆக உயர்த்தும் மசோதா தோல்வியடைந்த ஏப்., 17 இனி 'கருப்பு தினமாக' அறியப்படும். இந்த மசோதாக்களை தோற்கடித்ததன் மூலம் பெண்கள் தங்கள் உரிமையை பெறவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டன.
அன்னபூர்ணா தேவி மத்திய அமைச்சர், பா.ஜ.,
