
முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஆந்திராவில் கள்ளச்சாராய வியாபாரத்தை அதிகரித்து வருகிறது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள் சொந்த கடைகளிலேயே கள்ளச் சாராயத்தை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால், அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி தலைவர், ஒய்.எஸ்.ஆர். காங்.,
வெற்றி நிச்சயம்!
எதிரணியினர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் உண்மையில்லை. பிரதமர் மோடியின் பீஹார் வருகையால், சட்டசபை தேர்தலில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஒரு சிலரை பீஹார் மக்கள் விருந்தினராகவே பார்ப்பர். தே.ஜ., கூட்டணிக்கு எதிராக போட்டியிடும், 'இண்டி' வேட்பாளர்களுக்கு வெற்றி நிச்சயம்.
பவன் கெரா மூத்த தலைவர், காங்.,
ஒட்டுண்ணி கட்சி!
காங்கிரஸ் தன்னுடன் உள்ள கூட்டணி கட்சிகளை அழிக்கும் ஒட்டுண்ணி கட்சி. பீஹார் சட்டசபை தேர்தலில் இது எதிரொலிக்கும். அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் இந்த தேர்தலுக்கு பின் மாயமாகும். தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சி மற்றும், 'இண்டி' கூட்டணியின் அழிவுக்கும் இடையிலான போட்டியாக இந்த தேர்தல் இருக்கும்.
நட்டா தேசிய தலைவர், பா.ஜ.,

