சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட வழக்கு; ரூ. 110 கோடி சொத்து முடக்கம்
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட வழக்கு; ரூ. 110 கோடி சொத்து முடக்கம்
ADDED : ஆக 14, 2025 02:22 PM

புதுடில்லி: சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட வழக்கில் ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சைப்ரஸ் நாட்டை சேர்ந்த சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளம் பரிமேட்ச் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளமான பரிமேட்ச் வழக்கில் நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, மும்பை, டில்லி, நொய்டா, ஜெய்ப்பூர், சூரத், மதுரை, கான்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் 17 இடங்களில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனைகளின் போது, பல்வேறு குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ. 110 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.