தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மஹா.,வில் சட்டவிரோத பார்ட்டி: போதை பொருட்கள் பறிமுதல்

மஹா.,வில் சட்டவிரோத பார்ட்டி: போதை பொருட்கள் பறிமுதல்

மஹா.,வில் சட்டவிரோத பார்ட்டி: போதை பொருட்கள் பறிமுதல்


UPDATED : ஜூன் 07, 2026 09:07 PM

ADDED : ஜூன் 07, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 09:07 PM ADDED : ஜூன் 07, 2026 09:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புனே:மஹாராஷ்டிராவில் இரவு விடுதியில் சட்டவிரோதமாக நடந்த கேளிக்கை விருந்தில் 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மஹாராஷ்டிராவின் புனே அருகில் உள்ள துலாபர் கிராமத்தில் இரவு விடுதி இயங்கி வருகிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இந்த இரவு விடுதி இயங்கி வருவதாகவும், சட்டவிரோதமாக கேளிக்கை விருந்து நடந்து வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 6ம் தேதி அதிகாலை அங்கு விரைந்த போலீசார் விடுதிக்குள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, 107 ஆண்கள், 49 பெண்கள் என மொத்தம் 156 வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விடுதியில் இருந்ததும், அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக போதை பொருளை பயன்படுத்தியதையும் உறுதி செய்தனர். அவர்களில் மூன்று பேர் சிறார்கள் என்பது தெரிந்தது. சோதனையில், கஞ்சா, ஹூக்கா மற்றும் மதுபானங்கள் என மொத்தம் 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருள்கள் சிக்கின. சட்டவிரோத கேளிக்கை விருந்துக்கு ஏற்பாடு செய்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us