தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சட்ட விரோத மணல் குவாரி: பீஹாரில் 6 பேர் கைது

சட்ட விரோத மணல் குவாரி: பீஹாரில் 6 பேர் கைது

சட்ட விரோத மணல் குவாரி: பீஹாரில் 6 பேர் கைது


ADDED : செப் 08, 2025 08:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2025 08:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாட்னா: பீஹாரின் பாட்னா பகுதியில் சட்டவிரோதமாக மணல் குவாரி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து பாட்னா எஸ்எஸ்பி கார்த்திகேயா கே.ஷார்ம் கூறியதாவது:

பீஹார் மாநிலம் புறநகர் பகுதியில் சிலர், சோன் நதிக்கரையில் உள்ள அம்னாபாத்தில் சட்டவிரோத மணல் குவாரி மற்றும் பணம் பறித்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் நடத்திய சோதனையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் அனிஷ் குமார் கும்பலை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் சோன் நதிக்கரையில் உள்ள அம்னாபாத்தில் சட்டவிரோத மணல் குவாரி அமைக்க மற்றும் மிரட்டி பணம் பறித்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

கைதானவர்களிடமிருந்து ஏ.315 ரக போர் துப்பாக்கி, கைதுப்பாக்கி மற்றும் 49 பயன்படுத்தப்படாத தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டது. இவர்களுடன் தொடர்புள்ளவர்கள் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு கார்த்திகேயா கே. ஷார்ம் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us