sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'மூடா'வில் முறைகேடாக மனைகள் வாங்கியது அம்பலம்! 18 அலுவலர்களுக்கு லோக் ஆயுக்தா நோட்டீஸ்

/

'மூடா'வில் முறைகேடாக மனைகள் வாங்கியது அம்பலம்! 18 அலுவலர்களுக்கு லோக் ஆயுக்தா நோட்டீஸ்

'மூடா'வில் முறைகேடாக மனைகள் வாங்கியது அம்பலம்! 18 அலுவலர்களுக்கு லோக் ஆயுக்தா நோட்டீஸ்

'மூடா'வில் முறைகேடாக மனைகள் வாங்கியது அம்பலம்! 18 அலுவலர்களுக்கு லோக் ஆயுக்தா நோட்டீஸ்


ADDED : செப் 10, 2024 11:19 PM

Google News

ADDED : செப் 10, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'மூடா' சார்பில் விதிமுறைகளை மீறி, 350க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு, முறைகேடாக மனைகள் ஒதுக்கியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, 18 அதிகாரிகளுக்கு லோக் ஆயுக்தா போலீஸ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கியது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முதல்வர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபிரகாம், ஆவணங்களுடன் மைசூரில் உள்ள லோக் ஆயுக்தா போலீசில், முதல்வர் மீது புகார் அளித்தார்.

பின், முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி கோரி, ஆபிரகாம், ஸ்நேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் ஆகியோர் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தனர்.

நாளை விசாரணை


இதன்படி, கவர்னரும் முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். கவர்னரின் அனுமதியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் முதல்வர் 'ரிட்' மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 350க்கும் மேற்பட்ட உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கும், மூடா சார்பில், விதிமுறைகளை மீறி முறைகேடாக மனைகள் ஒதுக்கப்பட்டுஉள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, சமூக ஆர்வலர் கங்கராஜு, 2017ல், அப்போதைய ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு படையில் புகார் அளித்திருந்தார். அந்த மனைகளை திரும்ப பெறும்படியும் கோரி இருந்தார்.

இது குறித்து, 2022ல் அரசு அனுமதி பெற்று, ஏ.சி.பி., வழக்கு பதிவு செய்தது. ஆனால், அதே ஆண்டு ஏ.சி.பி., ரத்து செய்யப்பட்டது.

வழக்குகள் மாற்றம்


ஏ.சி.பி.,யில் பதிவான அனைத்து வழக்குகளும், லோக் ஆயுக்தாவுக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கில், லோக் ஆயுக்தா போலீசார் விசாரணையை தற்போது துவக்கி உள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில், மைசூரின் ஹிண்கல் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சர்வே எண்: 89ல், 7.18 ஏக்கர் நிலத்தில், 350க்கும் அதிகமான மனைகள், அதிகாரிகளுக்கு ஒதுக்கியது தெரியவந்துள்ளது.

போலி ஆவணம்


முறைகேடாக மனைகள் ஒதுக்கியது தொடர்பாக, 2017ல் மூடாவில் பணிபுரிந்த 18 அதிகாரிகளுக்கு, விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்கும்படியும், 'கெடு' விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில், ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று 1996 - 97ல் ஹிண்கல் கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏழைகளுக்கு வழங்காமல், மூடாவின் அனுமதியே பெறாமல், போலி ஆவணங்களை தயாரித்து, செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பி.இ.எம்.எல்., ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள், தபால் ஊழியர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், துணை தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட உயர் பதவியில் உள்ளவர்களுக்கு, தலா 25க்கு 25 சதுரடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார்தாரர் கங்கராஜு குற்றஞ்சாட்டி உள்ளார்.

'மூடா' முறைகேடு விவகாரம் ஏற்கனவே சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், தற்போது, மற்றொரு விவகாரத்தை லோக் ஆயுக்தா கையில் எடுத்துள்ளதால், ஆளுங்கட்சிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us