இந்திய பூர்விகத்தால் பெருமை: ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பூரிப்பு
இந்திய பூர்விகத்தால் பெருமை: ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பூரிப்பு
UPDATED : ஜன 27, 2026 04:12 PM
ADDED : ஜன 27, 2026 04:09 PM

புதுடில்லி: ''இந்தியாவை பூர்விகமாக கொண்டவன் என்கிற முறையில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்,'' என்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டானியோ தெரிவித்தார்.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டானியோ லுாயீஸ் சான்டாஸ் டா கோஸ்டா கலந்து கொண்டார்.
இன்று நடந்த வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: நான் ஐரோப்பிய கவுன்சில் தலைவர். ஆனால், நான் வெளிநாடு வாழ் இந்தியக்குடிமகனாகவும் இருக்கிறேன். ஆம், உண்மை தான். நான் எனது கோவா பூர்விகத்தால் பெருமை கொள்கிறேன். அங்கிருந்து தான் என் தந்தையின் குடும்பத்தினர் போர்ச்சுக்கல் வந்தனர். ஐரோப்பாவுக்கும், இந்தியாவுக்குமான தொடர்பு, என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையிலும் இருக்கிறது.
இன்று நமது வர்த்தகப் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இன்று நாம் நடத்தியுள்ள உச்சி மாநாடு, உலகுக்கு ஒரு தெளிவான செய்தியை வழங்கியுள்ளது. உலக விதிமுறைகளின் அடிப்படை மாறி வரும் நிலையில், இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும், நம்பகத்தன்மை வாய்ந்த கூட்டாளிகளாக ஒன்றுபட்டு நிற்கின்றன. இன்று, நமது பிணைப்பானது அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்புகள் என்ற முறையில், நமது குடிமக்களுக்கு நன்மை செய்வதற்காக நாம் இணைந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

