எரகோள் சுத்திகரிப்பு கழிவு நீர் சாலைகளில் பாய்வதால் பாதிப்பு
எரகோள் சுத்திகரிப்பு கழிவு நீர் சாலைகளில் பாய்வதால் பாதிப்பு
ADDED : மார் 04, 2024 06:53 AM
பங்கார்பேட்டை: எரகோள் அணை நீர் சுத்திகரித்த பின், கழிவு நீர் வீணாகி வெளியேறி சாலைகளில் பாய்கிறது. இதை சிலர், வயல்களுக்கு பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்துள்ளன.
கோலார் மாவட்டத்தில் பெரிய திட்டமாக எரகோள் அணை திறக்கப் பட்டது. இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்த பங்கார் பேட்டையின் அனந்த கிரி அருகில் 4.2 ஏக்கரில், 5.87 கோடி ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைத்து உள்ளனர்.
தினமும் 13 லட்சம் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படும். இந்த நீரை, பங்கார்பேட்டை முழுமைக்கும் சப்ளை செய்யலாம்.
சுத்திகரித்தப் பின், கழிவு நீரை, பங்கார்பேட்டை -- பூதிக்கோட்டை சாலை பூவரசனஹள்ளி அருகே திறந்து விட்டுள்ளனர். இதனை சில விவசாயிகள், தங்களின் நிலங்களுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் ஹுனசனஹள்ளி வெங்கடேஷ் கூறுகையில், ''சுத்திகரித்த பின், தண்ணீர் சாலையில் ஓடுகிறது. இதன் பாதிப்பை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
எரகோள் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட பின், சாலையில் பாய்வது எனக்கு தெரியவில்லை. இதன் மீது கவனம் செலுத்தப்படும். குடிநீர் சப்ளை செய்வதில் சுணக்கம் ஏற்படாது. கழிவு நீரை நிலத்தடி முறையாக பாய்ந்து செ்லவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் .
- சிவகுமார்,
உதவி பொறியாளர்,
குடிநீர் வழங்கல் வாரியம், கோலார் மாவட்டம்

