செல்போன் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதமாக குறைப்பு
செல்போன் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதமாக குறைப்பு
ADDED : ஜன 31, 2024 03:06 PM

புதுடில்லி: செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை (பிப்.,01) பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை (சுங்க கட்டணம்) 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.
செல்போன் உதிரிபாகங்களான பின் கவர்கள், பேட்டரி கவர்கள், ஜி.எஸ்.எம் ஆன்டெனா, மெயின் கேமரா லென்ஸ் மற்றும் இதர பிளாஸ்டிக் மற்றும் உலோக மெக்கானிக்கல் பொருட்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்துள்ளது.
உதிரிபாகங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் செல்போன்கள் ஏற்றுமதி உயரும். இறக்குமதி வரி குறைப்பு மூலம் செல்போன் துறையில் ஒரு நன்மை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.