
சாத்தியமில்லை!
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பார்லிமென்டில் அனைத்து கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். ஒருமித்த கருத்தை எட்டாமல், அந்த திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமல்ல.
- மல்லிகார்ஜுன கார்கே,
தலைவர், காங்கிரஸ்
வாபஸ் பெற வேண்டும்!
பா.ஜ.,வில் ஏராளமான திறமையாளர்கள் உள்ளனர். ஆனாலும், ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளருக்கு மட்டும் தான் வாய்ப்பளிக்க முடியும். இதை உணர்ந்து, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ள கட்சி நிர்வாகிகள், அதை வாபஸ் பெற வேண்டும்.
- ஹிமந்த பிஸ்வ சர்மா,
அசாம் முதல்வர், பா.ஜ.,
வதந்தியை நம்ப வேண்டாம்!
மஹாராஷ்டிராவில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களை நிறுத்தி விடுவதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். மக்கள் நல திட்டங்களை யார் நினைத்தாலும் நிறுத்த முடியாது. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.
- ஏக்நாத் ஷிண்டே,
மஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா

