sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குஜராத்தில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 12 நிலநடுக்கங்கள்; வெட்ட வெளியில் தவித்த மக்கள்

/

குஜராத்தில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 12 நிலநடுக்கங்கள்; வெட்ட வெளியில் தவித்த மக்கள்

குஜராத்தில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 12 நிலநடுக்கங்கள்; வெட்ட வெளியில் தவித்த மக்கள்

குஜராத்தில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 12 நிலநடுக்கங்கள்; வெட்ட வெளியில் தவித்த மக்கள்

2


UPDATED : ஜன 09, 2026 05:16 PM

ADDED : ஜன 09, 2026 04:32 PM

Google News

UPDATED : ஜன 09, 2026 05:16 PM ADDED : ஜன 09, 2026 04:32 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜ்காட்: குஜராத்தின் ராஜ்காட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா மண்டலத்தில் நேற்றிரவில் இருந்து இன்று (ஜன 09) நண்பகல் வரை 12 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜ்காட் மாவட்டத்தில் உள்ள 3 தாலுகாக்களில் வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்து இரவு முழுவதும் உறங்காமல் தவித்துள்ளனர்.

பெரும்பாலோனோர் என்ன செய்வது என்று தெரியாமல் வீடுகளை விட்டு திறந்தவெளியில் தஞ்சம் புகுந்தனர். உப்லேட்டா, தோராஜி மற்றும் ஜேட்புர் தாலுகாக்களில் மட்டும் 21 முறை நில அதிர்வு பதிவாகி உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஓம் பிரகாஷ் கூறி உள்ளார். இந்த நில நடுக்கங்கள் அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 1.4ல் இருந்து 3.8 வரை பதிவாகி உள்ளது.

குறிப்பாக, உப்லேட்டா பகுதியில் மட்டும் 12 முறை ரிக்டர் அளவுகோலில் குறைந்தபட்சம் 2.6 முதல் அதிகபட்சமாக 3.8 ஆக நிலநடுக்கங்கள் பதிவானது. முதல் முறையாக நில அதிர்வானது ரிக்டரில் 3.3 ஆக இருந்தது. தொடர்ந்து நிலநடுக்கங்கள் பதிவானாலும் எங்கும் உயிரிழப்புகளோ, பொருள் இழப்புகளோ ஏற்படவில்லை.






      Dinamalar
      Follow us