ADDED : ஜன 03, 2024 02:02 AM

புதுடில்லி: கடந்த இரு வாரங்களில் ரூ. 10 கோடி வரை பொதுமக்களிடம் இருந்து காங்கிரஸ் நன்கொடை வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்லிமென்ட் லோக்சபா தேர்தல் செலவுகளை எதிர்கொள்ளவும், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காக போராடவும், 'நாட்டுக்காக நன்கொடை' என்ற பிரசார இயக்கத்தை, காங்கிரஸ் சமீபத்தில் துவக்கியது.
இதன்படி, வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்தும் மற்றும் 'ஆன்லைன்' வாயிலாகவும், நிதி திரட்டப்பட உள்ளது.அத்துடன் பார்கோடு வாயிலாக, பொதுமக்கள் நன்கொடை செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜெய் மக்கான் கூறியது, பல்வேறு வழிகளில் நன்கொடை வசூலித்ததில் கடந்த இரு வாரங்களில் ரூ. 10 கோடி வரை கட்சிக்கு நிதி கிடைத்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்தை கட்டமைக்க, உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள் என்றார்.'