நாசிக்கில் வருமான வரித்துறை ரெய்டு: ரூ.26 கோடி பறிமுதல்
நாசிக்கில் வருமான வரித்துறை ரெய்டு: ரூ.26 கோடி பறிமுதல்
ADDED : மே 26, 2024 01:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாசிக்: நாசிக்கில் நகைக்கடை உரிமையாளர்களை குறி வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ. 96 கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கணக்கில் வராத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நகைக்கடை நிறுவனம் ஒன்றின் உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது. இந்த சோதனையில் ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.96 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.