ADDED : ஜன 24, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தலைநகர் டில்லியில் கடுங்குளிர் நிலவி வரும் சூழ்நிலையில், மின்சார பயன்பாடு 5,816 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, மின்சார விநியோக நிறுவனமான 'டிஸ்காம்' அதிகாரிகள் கூறியதாவது.
டில்லியில் கடந்த 19ல் 5,798 மெகாவாட் மின்விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதுவே, 17ல் 5,726 மெகாவாட்டாக இருந்தது. ஆனால், கடந்த 22ம் தேதி காலை 10.52 மணிக்கு மின்சார விநியோகம் 5,816 மெகாவட்டாக உயர்ந்தது.
டில்லியில் குளிர்கால மின்சார விநியோகம் கடந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி 5,526 மெகாவாட்டாக இருந்தது.