sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இடுக்கிக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு

/

இடுக்கிக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு

இடுக்கிக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு

இடுக்கிக்கு பயணிகள் வருகை அதிகரிப்பு


ADDED : செப் 08, 2025 03:37 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் ஓணப்பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான சுற்றுலாப் பகுதிகளை ஆறு நாட்களில் 48,416 பயணிகள் ரசித்து சென்றுள்ளனர்.

இம்மாவட்டத்தில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் கீழ் 12 சுற்றுலா பகுதிகள் உள்ளன.

அவற்றை ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு செப்.,1 முதல் செப்., 6 வரை 48,416 பயணிகள் ரசித்துச் சென்றனர். அதன் மூலம் அரசுக்கு ரூ.9 லட்சத்து 68 ஆயிரத்து 320 வருவாய் கிடைத்தது. இம்முறையும் வழக்கம் போல் வாகமண்ணிற்கு அதிக பயணிகள் சென்றனர்.

வாகமண் மலைகுன்றுக்கு 13,928, சாகச பூங்காவுக்கு 11,596 என 25,524 பேர் சென்றனர். பாஞ்சாலிமேடு 4322, மூணாறு தாவரவியல் பூங்கா 4314, ராமக்கல் மேடு 3444, ஸ்ரீ நாராயணபுரம் 2488, இடுக்கி ஹில் வியூ பூங்கா 2560, மாட்டுப்பட்டி அணையில் படகு சவாரிக்கு 1708 பேர் சென்றனர். அருவிகுழிக்கு 652, ஆமைபாறைக்கு 833 பேர் என மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் சென்றனர்.

இம்மாவட்டத்தில் மின்வாரியத்தினரின் பராமரிப்பில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடுக்கி அணையை பார்க்க செப்.1 முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 6 நாட்களில் அணையை 4750 பேர் ரசித்து சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us