ஹட்டி தங்கச் சுரங்கத்தின் உற்பத்தி திறன் அதிகரிப்பு
ஹட்டி தங்கச் சுரங்கத்தின் உற்பத்தி திறன் அதிகரிப்பு
ADDED : ஜன 12, 2024 11:07 PM

ராய்ச்சூர்: ஹட்டி தங்கச் சுரங்கத்தில் ஆண்டுக்கு 4,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்யும் வகையில், கூடுதல் உற்பத்தி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூரில் ஹட்டி தங்கச் சுரங்கம் செயல்படுகிறது. நாட்டில் தற்போது செயல்பாட்டில் உள்ள ஒரே தங்கச் சுரங்கமாக திகழ்கிறது.
கர்நாடகா அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. ஆண்டுக்கு 2,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில், 59 கோடி ரூபாய் செலவு செய்து, கூடுதலாக பால் மில் எனும் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது.
இங்கு, ஆண்டுக்கு 2,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதன் மூலம், ஒட்டு மொத்தமாக ஹட்டி தங்கச் சுரங்கத்தில் ஆண்டுக்கு 4,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய முடியும்.
தற்போதைக்கு, புதிய உற்பத்தி ஆலையில், 500 கிலோ தங்கம் உற்பத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹட்டி தங்கச் சுரங்க நிறுவனம், 1,324 ஏக்கர் சொந்தமான நிலம் உள்ளது.
ஷிவமொகா, தார்வாட், சித்ரதுர்கா, தங்கவயல் ஆகிய நகரங்களில் தங்கம் இருக்கிறது.
ஆனால், உற்பத்தி செலவு அதிகம் என்பதால், ஹட்டியில் மட்டும் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.