பிரதமர் மோடி மீதான நம்பிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்
பிரதமர் மோடி மீதான நம்பிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்
ADDED : மார் 06, 2024 05:58 PM

புவனேஸ்வர்: ஒடிசா முழுவதும் பிரதமர் மோடி மீதான நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் மாற்றுக் கட்சியினர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர். இதையடுத்து, தர்மேந்திர பிரதான் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வை உடன் செயல்பட்டு வருகிறார். மாற்றுக்கட்சியை சேர்ந்த கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் இன்று பா.ஜ.,வில் இணைந்துள்ளனர்.
அனைவரையும் பா.ஜ., சார்பாக வரவேற்கிறேன். அனைவரின் ஒத்துழைப்பும் பா.ஜ.,வை பலப்படுத்தும். பா.ஜ.,வினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ஒடிசா முழுவதும் பிரதமர் மோடி மீதான நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் வளர்ச்சி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

