பாலியல் வழக்கில் மெத்தனம் இன்ஸ்., - எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
பாலியல் வழக்கில் மெத்தனம் இன்ஸ்., - எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 21, 2026 02:43 AM
நொய்டா: பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கிய சட்டப் பிரிவுகளை சேர்க்காததால், போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் - இன்ஸ்பெக்டர் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, 24 வயது பெண் டில்லி அருகே உ.பி., மாநிலம் நொய்டாவில் வசிக்கிறார். சமூக வலைதளம் வாயிலாக. 26 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தனர்.
திருமணம் செய்து கொள்வதாக கூறிய, அந்த வாலிபர் பலமுறை பாலியல் ரீதியாக தன் தோழியுடன் உறவு கொண்டுள்ளார். இந்நிலையில், மதம் மாறினால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, வாலிபர் மீது போலீசில் இளம்பெண் புகார் செய்தார். நொய்டா பேஸ்-3 போலீசார், வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால், உத்தர பிரதேச மாநில சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டம் மற்றும் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யவில்லை என, வலதுசாரி செயற்பாட்டாளர்கள், போலீஸ் ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய நொய்டா போலீஸ் துணை கமிஷனர் சக்தி மோகனுக்கு, டி.ஜி.பி., நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், மத்திய நொய்டா உதவி ஆணையர் கமிஷனர் உமேஷ் யாதவிடம் துறை ரீதியான விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நொய்டா பேஸ் - 3 போலீஸ் இன்ஸ்பெக்டர் புனீத் குமார், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சப் - இன்ஸ்பெக்டர் பிரீத்தி குப்தா ஆகிய இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரிக்க நொய்டா கூடுதல் துணை கமிஷனர் மனிஷா சிங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பாரதிய நியாய சன்ஹிதா 69, 351 மற்றும் 308 ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில்,
உத்தர பிரதேச சட்ட விரோத மதமாற்ற தடைச் சட்டம் பிரிவு 5(3) மற்றும் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 3(2)(5 ஆகிய பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. விசாரணை நடக்கிறது.
