sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கும் தீர்மானம் லோக்சபா, ராஜ்யசபாவில் அளித்தது 'இண்டி' கூட்டணி

/

 தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கும் தீர்மானம் லோக்சபா, ராஜ்யசபாவில் அளித்தது 'இண்டி' கூட்டணி

 தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கும் தீர்மானம் லோக்சபா, ராஜ்யசபாவில் அளித்தது 'இண்டி' கூட்டணி

 தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கும் தீர்மானம் லோக்சபா, ராஜ்யசபாவில் அளித்தது 'இண்டி' கூட்டணி

3


ADDED : மார் 14, 2026 01:30 AM

Google News

3

ADDED : மார் 14, 2026 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது டில்லி நிருபர் -

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீசை, லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும், காங்., - தி.மு.க., - சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி நேற்று சமர்ப்பித்தது.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், தகுதிவாய்ந்த ஏராளமான வாக்காளர்களை நீக்குவதாகவும், இண்டி கூட்டணி குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீசை, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், இண்டி கூட்டணி நேற்று சமர்ப்பித்தது.

லோக்சபாவில், 130; ராஜ்யசபாவில், 63 எம்.பி.,க்கள் நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதற்கு, டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் ஆதரவு அளித்துள்ளது. தவிர, சுயேச்சை எம்.பி.,க்கள் சிலரும் நோட்டீசில் கையெழுத்திட்டு உள்ளனர்.

நம் வரலாற்றிலேயே தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக பதவி நீக்க நோட்டீஸ் வழங்கப்படுவது இதுவே முதன்முறை.

ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு இரு சபைகளிலும் பெரும்பான்மை இருப்பதால், ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க நோட்டீஸ் தோற்கடிக்கப்படுவது உறுதி.

இது தெரிந்தும், அவருக்கு நெருக்கடி கொடுக்கவே இந்த தீர்மான நோட்டீசை இண்டி கூட்டணி சமர்ப்பித்துள்ளது.

குற்றச்சாட்டுகள் என்ன?  ஆளும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக நடந்து கொள்வது  எதிர்க்கட்சிகளிடம் பாரபட்சம் காட்டுவது  தேர்தல் முறைகேடுகள் குறித்த விசாரணைகளை திட்டமிட்டு தடுத்தது  எஸ்.ஐ.ஆர்., பணியில் தகுதிவாய்ந்த ஏராளமான வாக்காளர்களை நீக்கியது  எஸ்.ஐ.ஆர்., மூலம் பா.ஜ.,வுக்கு உதவியது. இது போன்ற குற்றச்சாட்டுகளை பதவி நீக்க தீர்மான நோட்டீசில், இண்டி கூட்டணி குறிப்பிட்டுள்ளது.



நடைமுறை அரசியலமைப்பு சட்டத்தின்படி, தலைமை தேர்தல் கமிஷனரை நீக்குவது என்பது உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கு இணையான கடினமான நடைமுறை. பார்லி.,யின் இரு சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதன்பின்னரே அவரை பதவியிலிருந்து ஜனாதிபதி நீக்க முடியும்.








      Dinamalar
      Follow us