தேர்தலில் இண்டியா கூட்டணி பெரும்பான்மை பெறும்: சச்சின் பைலட் நம்பிக்கை
தேர்தலில் இண்டியா கூட்டணி பெரும்பான்மை பெறும்: சச்சின் பைலட் நம்பிக்கை
ADDED : ஏப் 02, 2024 02:49 PM

புதுடில்லி: ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது இண்டியா கூட்டணி பெரும்பான்மை பெறும் என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறினார்.
இது குறித்து சச்சின் பைலட் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என பா.ஜ.,வினர் கூறி வருவது, ஆணவத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து அறிக்கையை பா.ஜ., முதலில் சமர்ப்பிக்க வேண்டும். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர்.மக்கள் பிரச்னைக்காக இண்டியா கூட்டணி போராடும்.
ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது இண்டியா கூட்டணி பெரும்பான்மை பெறும். தேர்தல் ஆணையம் அனைத்து தரப்பினருக்கும் சமமான முறையில் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். முன்னெப்போதும் இல்லாத வகையில் காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

