sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியா-பிரேசில் வர்த்தகம் 20பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு: இருதரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு

/

இந்தியா-பிரேசில் வர்த்தகம் 20பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு: இருதரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு

இந்தியா-பிரேசில் வர்த்தகம் 20பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு: இருதரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு

இந்தியா-பிரேசில் வர்த்தகம் 20பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு: இருதரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு


ADDED : பிப் 21, 2026 03:41 PM

Google News

ADDED : பிப் 21, 2026 03:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 5 ஆண்டுகளில் இந்தியா-பிரேசில் வர்த்தகம் 20 பில்லியன் டாலராக உயர்த்த பிரதமர் மோடியும் அதிபர் லுலா டி சில்வாவும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு செய்துள்ளனர்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று(பிப்ரவரி 21) காலை ஜனாதிபதி மாளிகையில் அதிபர் லுலாவுக்கு ராணுவ மரியாதையுடன் கூடிய அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் டில்லியில் உள்ள ஐ தராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் அடுத்த 5 ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை 20 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இருதரப்பு பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சங்கள்:

உயர்தொழில்நுட்பம் மற்றும் தூய்மையான எரிசக்திக்குத் தேவையான முக்கியத் தாதுக்கள் மற்றும் சுரங்கத் துறையில் ஒத்துழைக்க இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

பிரேசிலில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பிற்கான ஒரு சிறந்த மையத்தை உருவாக்க இந்தியா உதவ முன்வந்துள்ளது.

எத்தனால் உள்ளிட்ட உயிரி எரிபொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.

மலிவு விலையில் மருந்துகள் வழங்குதல் மற்றும் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.தற்போது லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக பிரேசில் உள்ளது.

இந்த 'வின்-வின் கூட்டணி தெற்கு நாடுகளின் குரலாக உலக அரங்கில் ஒலிக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us