பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்திற்கு இந்தியா அழைப்பு
பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்திற்கு இந்தியா அழைப்பு
ADDED : ஜூலை 19, 2025 12:11 AM

நியூயார்க் : ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் விரைவான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என, இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.
இந்நிலையில், ஐ.நா.,வில் நேற்று நடந்த விவாதத்தில் அந்த அமைப்புக்கான இந்திய ----------------துாதர் ஹரிஷ் பர்வதநேனி, இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சிலில் விரைந்து சீர்திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுகுறித்து ஐ.நா.,வில் அவர் பேசுகையில், ''ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் விரைவாகவும், காலக்கெடுவிற்குள்ளும் சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஐ.நா.,வால் கடந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட 'எதிர்காலத்திற்கான உடன்படிக்கை' என்பதை செயல்படுத்த இந்தியா முழு ஈடுபாட்டை வழங்கும்.
''சீர்திருத்தம், பாதுகாப்பு கவுன்சிலின் நம்பகத்தன்மையை மேம்படுத்த வேண்டும். கவுன்சிலின் தற்போதைய வடிவம் சமகால புவிசார் அரசியல் நிலவரங்களை பிரதிபலிக்கவில்லை,''என்றார்.

