இந்தியா விரைவில் மிகப்பெரிய சந்தையாக மாறக்கூடும்; கணித்தார் ஓபன் ஏஐ நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன்!
இந்தியா விரைவில் மிகப்பெரிய சந்தையாக மாறக்கூடும்; கணித்தார் ஓபன் ஏஐ நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன்!
ADDED : ஆக 08, 2025 10:05 PM

புதுடில்லி: உலக அளவில் இந்தியா விரைவில் மிகப்பெரிய சந்தையாக மாறக்கூடும் என ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்து உள்ளார்.
ஓபன் ஏஐ அதன் மிகவும் மேம்பட்ட ஏஐ மாடலான GPT-5 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது துல்லியம், வேகம் மற்றும் பகுத்தறிவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் அந்நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் பேசியதாவது: உலக அளவில் இந்தியா விரைவில் மிகப்பெரிய சந்தையாக மாறக்கூடும்.
இந்தியா நம்பமுடியாத அளவிற்கு வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக திகழ்கிறது.அமெரிக்காவை விஞ்சும் திறன் கொண்டது. உலகில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா எங்கள் இரண்டாவது பெரிய சந்தையாகும். மேலும் இது எங்கள் மிகப்பெரிய சந்தையாக மாறக்கூடும்.
பயனர்கள் ஏஐ உடன் என்ன செய்கிறார்கள், இந்திய குடிமக்கள் ஏஐ உடன் என்ன செய்கிறார்கள் என்பது உண்மையில் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், அதை மிகவும் மலிவு விலையில் வழங்கவும் ஓபன் ஏஐஉள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. செப்டம்பரில் இந்தியாவிற்கு வருகை தர திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.