தகர்த்தெறிந்த இந்தியா; பாக்., ட்ரோன்கள், ஏவுகணைகள் சிதறியது; புகைப்படம் ஆல்பம்!
தகர்த்தெறிந்த இந்தியா; பாக்., ட்ரோன்கள், ஏவுகணைகள் சிதறியது; புகைப்படம் ஆல்பம்!
UPDATED : மே 10, 2025 06:29 PM
ADDED : மே 10, 2025 02:11 PM

புதுடில்லி:
இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், பாகிஸ்தான் தரப்பில் துணை பிரதமர் இஷாக் தர்ரும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
முன்னதாக, நேற்று இரவு பாகிஸ்தானில் இருந்து இந்தியா மீது ஏவப்பட்ட ஏவுகணைகள், டிரோன்களை சுட்டு வீழ்த்தி நமது பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். பாக்., ட்ரோன்கள், ஏவுகணை பாகங்கள் சிதறி கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
* ஹிமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தின் சிந்த்பூர்ணி அருகே பாகிஸ்தானின் ஏவுகணைகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
* ராஜஸ்தானின் ஜெய்சால்மரில், சிதறி கிடக்கும் பாக்., ஏவுகணைகள், ட்ரோன்கள் பாகங்களை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் ஆய்வு செய்தார்.
* ஹரியானா மாநிலத்தில் உள்ள சிர்சாவில், பாகிஸ்தான் ஏவுகணைகளை பாதுகாப்பு படையினர் துல்லியமாக சுட்டு வீழ்த்தினர். சிதறி கிடக்கும் பாகங்களை மக்கள் பார்த்தனர்.
* அமிர்தசரஸில் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்திய பாக்., ட்ரோன்கள், ஏவுகணைகளின் பாகங்கள் சிதறி கிடந்தன.
* ஜம்முவில் உள்ள ஷம்பு கோவில் அருகே, சிதறி கிடக்கும் பாக்., ட்ரோன்கள், ஏவுகணைகளின் பாகங்கள்.
* பஞ்சாபின் ஜலந்தரில் சிதறி கிடந்த பாக்.,ட்ரோன்களின் பாகங்கள்.
* பஞ்சாபின் ஜலந்தரில் சிதறி கிடந்த பாக்.,ட்ரோன்களின் பாகங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
* காஷ்மீரில் சிதறி கிடக்கும் பாக்.,ட்ரோன்களின் பாகங்கள்.
* பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்திய பாக்., ட்ரோன், ஏவுகணைகள் பாகங்கள் சிதறி கிடந்ததை போலீசார் பார்வையிட்டனர். இடம்: ஜலந்தர், பஞ்சாப்.