sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜனவரி 27ல் டில்லியில் உச்சி மாநாடு; கையெழுத்தாகிறது இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தம்

/

ஜனவரி 27ல் டில்லியில் உச்சி மாநாடு; கையெழுத்தாகிறது இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தம்

ஜனவரி 27ல் டில்லியில் உச்சி மாநாடு; கையெழுத்தாகிறது இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தம்

ஜனவரி 27ல் டில்லியில் உச்சி மாநாடு; கையெழுத்தாகிறது இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தம்

2


ADDED : ஜன 24, 2026 08:15 PM

Google News

ADDED : ஜன 24, 2026 08:15 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் ஜனவரி 27ம் தேதி நடக்கும் உச்சி மாநாட்டில், இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே நீண்ட காலமாக இழுபறியில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் மோடி மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் முன்னிலையில், கையெழுத்தாக உள்ளது.

இந்தாண்டு குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அதன் பின், இந்தியா - ஐரோப்பிய யூனியன் 16வது உச்சி மாநாடு 27ம் தேதி டில்லியில் நடைபெற உள்ளது.

இதற்கு, பிரதமர் மோடி மற்றும் ஐரோப்பிய யூனியன் மற்றும் கவுன்சில் தலைவர்களான உர்சுலா, கோஸ்டா ஆகியோர் தலைமை தாங்க உள்ளனர். அப்போது, நீண்ட காலமாக இழுபறியில் இருந்த இந்தியா - ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு, 2007-ல் துவங்கி, 2013 வரை பல சுற்றுகளாக நடந் தது. ஆனால், கார், மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப இந்திய நிறுவனங்களுக்கான தரவு பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமை, தொழிலாளர் விதிகள் போன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பேச்சு நின்று போனது. கடந்த 2022 ஜூனில் மீண்டும் அதிகாரப்பூர்வ பேச்சு துவங்கப்பட்டு, இந்தமாதத்துக்குள் ஒப்பந்தத்தை முடிப்பது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், சமீபத்தில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பேசிய ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், “இந்தியா - ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அனைத்து ஒப்பந்தங்களின் தாய். இது ஜி.டி.பி., எனப்படும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீத பங்கை கொண்டிருக்கும்,” என்றார்.

ஐரோப்பிய யூனியன், இந்தியாவுக்கான மிகப்பெரிய சரக்கு வர்த்தக சந்தையாக உள்ளது. கடந்த 2024 - 25ம் நிதிஆண்டில், இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தகம், 12.50 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதித்ததால் இந்தியாவின் ஆடை தயாரிப்பு, தோல் பொருட்கள் உற்பத்தி, வைர நகை தொழில் போன்ற தொழிலாளர் அதிகம் தேவைப்படும் துறைகளை கடுமையாக பாதித்துள்ளது.

இந்நிலையில், இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு மாற்று சந்தையை திறந்துவிடும். குறிப்பாக, ஐரோப்பாவில் இந்திய ஆடை தயாரிப்புகளுக்கு விதிக்கப் படும் 10 சதவீத வரி, இந்த ஒப்பந்தத்தால் நீங்கும் வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் தொழிலாளர் உரிமை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற விஷயங்களை, வர்த்தக ஒப்பந்தங்களுடன் ஐரோப்பிய யூனியன் இணைப்பது நம் நாட்டுக்கு சவாலாக அமையலாம்.

எரிபொருள் விலைகளின் நெ ருக்கடி, சீனா - அமெரிக்கா போட்டி ஆகியவற்றால் ஐரோப்பா கடுமையான பொருளாதார சவால்களை சந்தித்து வருகிறது. எனவே அவர்களுக்கு வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தை நல்ல ஒரு முதலீட்டு தேர்வாக அமையும் என்பதால், இந்த ஒப்பந்தம் அவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்ன செய்யும்?

இரு நாடுகள் அல்லது கூட்டமைப்புகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், இறக்குமதி - ஏற்றுமதி வரிகள் குறையும். சில பொருட்களுக்கு வரி முழுமையாக நீக்கப்படும். ஐ.டி., வங்கி உள்ளிட்ட சேவை துறைகளுக்கு சலுகைகள் கிடைக்கும். இரு நாடுகள் இடையே முதலீடுகள் எளிதாகும்; வேலைவாய்ப்பு பெருகும்.

27 உறுப்பு நாடுகள்

ஐரோப்பிய யூனியன் என்பது 27 உறுப்பு நாடுகளை கொண்ட அமைப்பாகும். உலக பொருளாதாரத்தில் எப்போதும் நல்ல நிலையில் இருப்பது ஐரோப்பிய நாடுகள் தான். இந்த ஆணையத்தின் தலைவர் இந்திய பொருளாதாரத்தை பாராட்டி உள்ளார்






      Dinamalar
      Follow us