உள்ளடக்கத்திற்கு செல்ல

இந்தியாவும், ஜெர்மனியும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படும்; பிரதமர் மோடி உறுதி
இந்தியாவும், ஜெர்மனியும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படும்; பிரதமர் மோடி உறுதி
ADDED : நவ 24, 2026 07:51 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடி போனில், இந்தியா-ஜெர்மனி இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேசினர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸுடன் உரையாடலை மேற்கொண்டேன். இந்தியா-ஜெர்மனி இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து நாங்கள் ஆலோசித்தோம்.
வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிகள் குறித்து விவாதித்தோம்.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும், அமைதி மற்றும் சர்வதேச சட்ட ஒழுங்கைப் பேணுவதற்கும் இந்தியாவும், ஜெர்மனியும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
