அந்த ஒரு விஷயத்தில் அமெரிக்கா, ஜெர்மனியை விட இந்தியா மேல்: அடித்துச் சொல்கிறது எஸ்.பி.ஐ.,
அந்த ஒரு விஷயத்தில் அமெரிக்கா, ஜெர்மனியை விட இந்தியா மேல்: அடித்துச் சொல்கிறது எஸ்.பி.ஐ.,
ADDED : செப் 12, 2024 03:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சை விட இந்தியா பணவீக்கத்தை சிறப்பாக கையாண்டதாக எஸ்.பி.ஐ., வங்கி கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரிசர்வ் வங்கி, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் இணைந்து செயல்படுத்திய சீர்திருத்தம் காரணமாக உருவான துடிப்பான நிதி நிலை கட்டமைப்பு காரணமாக, பணவீக்கம் குறித்த இலக்கு நிர்ணயிக்க முடிந்தது.
2021 முதல் 2024 வரை, இந்தியாவை காட்டிலும் பெரிய பொருளாதார நாடுகள் கடுமையான பணவீக்க சவால்களை சந்தித்தன. இந்த காலத்தில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சை விட பணவீக்கத்தை இந்தியா சிறப்பாக கையாண்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

