ஒலிம்பிக்கில் டாப்- 5ல் இந்தியா; அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்!
ஒலிம்பிக்கில் டாப்- 5ல் இந்தியா; அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்!
ADDED : செப் 20, 2024 06:45 PM

ஐதராபாத்: 'ஒலிம்பிக் 2047ல் இந்தியா முதல் 5 இடங்களில் இருக்கும்' என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த சர்வதேச இளைஞர் கருத்தரங்கு நிகழ்ச்சியில், மத்திய விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் செய்யும் நோக்கில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 2036 ஒலிம்பிக்போட்டிகளை இந்தியாவில் நடத்துவது, 2047ல் சர்வதேச அளவில் நடைபெறும் ஒலிம்பிக்போட்டிகளில் முதல் 5 இடங்களுக்குள் இடம் பிடிக்கச்செய்வதுதான் நோக்கம்.
அதற்காகவே,தற்போதைய பட்ஜெட்டில் 100 சதவீத இளைஞர்களுக்கான திட்டம் வகுக்க ரூ.2 லட்சம் கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்களுக்காகவே, மேரா யுவா பாரத்- மை பாரத் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.