தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இந்தியா தயாரித்து வரும் 'அக்னி-5' பதுங்கு குழியை அழிக்கும் ஏவுகணைகள்!

இந்தியா தயாரித்து வரும் 'அக்னி-5' பதுங்கு குழியை அழிக்கும் ஏவுகணைகள்!

இந்தியா தயாரித்து வரும் 'அக்னி-5' பதுங்கு குழியை அழிக்கும் ஏவுகணைகள்!


ADDED : ஜூன் 30, 2025 07:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2025 07:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: அக்னி-5 பதுங்கு குழியை அழிக்கும் ஏவுகணையை (பங்கர் பஸ்டர் ஏவுகணை) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி. ஆர்.டி.ஓ.,) தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணை நிலத்தடியில் 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூன் 22ம் தேதி, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா இதுவரை பயன்படுத்தப் படாத ஜி.பி.யூ-57 பதுங்கு குழி அழிக்கும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த பங்கர் பஸ்டர் குண்டு மீது அனைத்து உலக நாடுகளின் கவனமும் சென்றது. தற்போது உலக நாடுகள், சக்திவாய்ந்த புதிய ஏவுகணை அமைப்பை உருவாக்குவதன் மூலம் எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறது.

அந்த வகையில், அக்னி-5 பதுங்கு குழியை அழிக்கும் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி. ஆர். டி. ஓ.,) தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணை நிலத்தடியில் 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதன் சிறப்புகள் பின்வருமாறு:

* 7,500 கிலோகிராம் எடையுள்ள பதுங்கு குழி அழிக்கும் ஏவுகணையை போர்க்கப்பலில் கொண்டு சென்று ஏவ முடியும்.

* கான்கிரீட் அடுக்குகளுக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் கடினமான எதிரி தளங்களைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணை, வெடிப்பதற்கு முன்பு 80 முதல் 100 மீட்டர் நிலத்தடியில் ஊடுருவும் திறன் கொண்டது.

* அமெரிக்காவைப் போல, பெரிய, விலையுயர்ந்த குண்டுவீச்சு விமானங்களை விநியோகிப்பதற்கு பதிலாக, இந்தியா பதுங்கு குழிகளை தாக்கும் குண்டுகளை தயாரித்து வருகிறது.

* ஏற்கனவே உள்ள அக்னி-5 ஏவுகணை 5,000 கிலோமீட்டர்கள் தூரம் வரை சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.

* அக்னி-5ன் இரண்டு புதிய வகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒன்று தரைக்கு மேலே உள்ள இலக்குகளை துல்லியமாக குறி வைத்து தாக்குதல் நடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

* மற்றொன்று கடினமான நிலத்தடி உள்கட்டமைப்பில் துளையிட்டு தாக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us