தொலைநோக்கு பார்வையுடன் இந்தியா செயல்படுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்
தொலைநோக்கு பார்வையுடன் இந்தியா செயல்படுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்
UPDATED : நவ 03, 2025 12:42 PM
ADDED : நவ 03, 2025 12:36 PM

புதுடில்லி: கடந்த 10-11 ஆண்டுகளில் இந்தியா தொலைநோக்கு பார்வையுடன் இந்தியா செயல்படுகிறது என்பது நிரூபணம் ஆகி உள்ளது. இந்தியா இனி தொழில்நுட்பத்தின் நுகர்வோர் மட்டுமல்ல, தொழில்நுட்பம் மூலம் மாற்றத்தின் முன்னோடியாக மாறியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
டில்லி பாரத் மண்டபத்தில் புவி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். பின்னர் மாநாட்டில் அவர் பேசியதாவது:
உலகளாவிய ஏஐ கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. கடந்த 10-11 ஆண்டுகளில் இந்தியா தொலைநோக்கு பார்வையுடன் இந்தியா செயல்படுகிறது என்பது நிரூபணம் ஆகி உள்ளது. இந்தியா இனி தொழில்நுட்பத்தின் நுகர்வோர் மட்டுமல்ல, தொழில்நுட்பம் மூலம் மாற்றத்தின் முன்னோடியாக மாறியுள்ளது.
அடித்தளம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப, உலகில் இன்று ஒரு பெரிய நாள். 21ம் நூற்றாண்டில், வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் காட்டுவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து நிபுணர்கள் ஒன்றிணைய வேண்டிய அவசியம் இருந்தது. இந்தத் தேவை ஒரு யோசனைக்கு வழிவகுத்தது. இந்தக் யோசனை தான் இந்த மாநாட்டினை நடத்த வழி வகுத்தது. கோவிட் காலத்தில், கடினமாக சூழலில், ஒரு உள்நாட்டு தடுப்பூசியை நாங்கள் உருவாக்கினோம்.
ரூ. 1 லட்சம் கோடி
