பாகிஸ்தானின் லாகூர், சியால்கோட்டில் இந்தியா பதில் தாக்குதல்
பாகிஸ்தானின் லாகூர், சியால்கோட்டில் இந்தியா பதில் தாக்குதல்
UPDATED : மே 09, 2025 02:53 PM
ADDED : மே 08, 2025 10:32 PM

புதுடில்லி; பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் லாகூர் மற்றும் சியால்கோட் நகரங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தானில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் டுரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. உடனடியாக இந்திய ராணுவமும் வான்பாதுகாப்பு கவச அமைப்புகள் மூலம் அவற்றை மறித்து தாக்கி அழித்து வருகிறது. இதனையடுத்து அந்த மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், பாகிஸ்தானுக்கு சொந்தமான எப்.,16 போர் விமானம் உள்ளிட்ட 3 போர் விமானங்கள் மற்றும் 58 டுரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தி உள்ளது.
தொடர்ந்து முப்படை தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அந்நாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் சியால்கோட் பகுதிகளில் இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.