வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் 3 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் 3 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு
ADDED : செப் 25, 2025 01:27 PM

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி ஆமதாபாத்தில் அக்., 2ம் தேதி தொடங்குகிறது. 2வது போட்டி டில்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்திலும் நடக்க இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன், ஜெகதீஷன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர் ஜடேஜாவுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் தொடரில் சரிவர சோபிக்காத கருண் நாயர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயத்தில் இருந்து இன்னும் மீண்டு வராத ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை. அடுத்ததாக சொந்த மண்ணில் நடக்கும் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கில் தலைமையிலான இந்திய அணியின் முழு விபரம்;
கில் (கேப்டன்)
ஜெயஸ்வால்
கே.எல். ராகுல்
சாய் சுதர்சன்
தேவதட் படிக்கல்
நிதிஷ் குமார் ரெட்டி
துருவ் ஜூரேல்
என். ஜெகதீசன்
ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்)
வாஷிங்டன் சுந்தர்
அக்சர் படேல்
ஜஸ்ப்ரீத் பும்ரா
முகமது சிராஜ்
பிரசித் கிருஷ்ணா
குல்தீப் யாதவ்