தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நாட்டின் முதல் ஏ.ஐ., நுண் ஏவுகணை: பொக்ரானில் வெற்றிகரமாக பரிசோதனை

நாட்டின் முதல் ஏ.ஐ., நுண் ஏவுகணை: பொக்ரானில் வெற்றிகரமாக பரிசோதனை

நாட்டின் முதல் ஏ.ஐ., நுண் ஏவுகணை: பொக்ரானில் வெற்றிகரமாக பரிசோதனை


ADDED : நவ 23, 2026 10:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 10:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாட்டின் பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் தனியார் நிறுவனங்களும் வலுவாகக் கால்பதிக்க ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில், நம் ராணுவத்திற்குப் பலம் சேர்க்கும் விதமாக, ஏ.ஐ., திறன் கொண்ட, 'ஜுவாலா எம்.கே., - 1' என்ற நுண் ஏவுகணையை 'ஐ.ஜி., டிபன்ஸ்' என்ற தனியார் நிறுவனம் உருவாக்கியது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் உள்ள துப்பாக்கிச் சுடும் தளத்தில் இந்த ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் இந்த ஆளில்லா விமான எதிர்ப்பு ஏவுகணை, குறைந்தபட்சம் 50 மீட்டர் முதல் அதிகபட்சம் 5 கி.மீ., தூரம் வரையிலான இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. எதிரிகளின் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் ட்ரோன்களை அடையாளம் கண்டு, நேரடியாகத் தாக்கி அழிக்கும், 'ஹார்ட் கில்' தொழில்நுட்பமும் இதில் புகுத்தப்பட்டுள்ளது.

வழக்கமான வான்பாதுகாப்பு அமைப்புகளில் அதிக விலை கொண்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த நுண் ஏவுகணை குறைந்த செலவில் உருவாக்கப்பட்டு, சிறிய டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை எதிர்கொள்ளும் கச்சிதமான ஆயுதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கியச் சிறப்பம்சம், 'கிரிட்' எனப்படும், செயற்கை நுண்ணறிவு போர் மேலாண்மை அமைப்பு தான். இது சென்சார் ஒருங்கிணைப்பு முதல் இலக்கை தாக்கி அழிப்பது வரை ஒட்டுமொத்த செயல்பாட்டையும் தானியங்கி முறையில் ஒருங்கிணைக்கிறது.

நவீனப் போர்களில் குறைந்த விலையுள்ள, 'ட்ரோன்'கள் எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் கூட்டமாகப் பறந்து தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இவற்றை அதிகச் செலவு பிடிக்கும் வழக்கமான ஏவுகணைகளைக் கொண்டு வீழ்த்துவது ராணுவப் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக உள்ளது. இந்தச் சூழலில், 'ஜுவாலா எம்.கே., - 1' நுண் ஏவுகணையின் வரவு, பாதுகாப்பு துறையின் செலவைப் பெருமளவு கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us