அதிக விமானங்களை வாங்கும் இந்தியா: ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம்
அதிக விமானங்களை வாங்கும் இந்தியா: ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம்
ADDED : ஜன 18, 2024 02:27 PM

புதுடில்லி: அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக விமானங்களை வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: 2030க்குள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 200 ஆக உயரும். விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்திய மாதங்களில் விமானத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இண்டிகோ விமான நிர்வாகம் தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிட்டத்தட்ட 500 விமானங்களை வாங்கியுள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக விமானங்களை வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.