இந்தியா, இங்கிலாந்து இடையேயான உறவு மகத்தானது: ஜெய்சங்கர் பெருமிதம்
இந்தியா, இங்கிலாந்து இடையேயான உறவு மகத்தானது: ஜெய்சங்கர் பெருமிதம்
ADDED : ஜூலை 25, 2024 10:57 AM

புதுடில்லி: 'இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான உறவுக்கு மகத்தான சாத்தியக்கூறுகள் உள்ளன' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
அரசு முறை பயணமாக, இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாம்மி இந்தியா வந்துள்ளார். டில்லியில், அவர் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் ஆலோசனை நடத்தினார்.
பொருளாதாரம்
பின்னர் டேவிட் லாம்மி கூறியதாவது: இந்தியா அதிக மக்கள் தொகையை கொண்ட உலகின் பெரிய நாடு. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.
உறவு
இந்தியாவும் இங்கிலாந்தும் உலகளாவிய பிரச்னைகளை சரி செய்ய, ஒன்றாகச் செயல்படுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான உறவுக்கு மகத்தான சாத்தியக்கூறுகள் உள்ளன என ஜெய்சங்கர் கூறினார்.