அமெரிக்காவில் சட்டங்களை மீறும் இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படலாம்: தூதரகம் எச்சரிக்கை
அமெரிக்காவில் சட்டங்களை மீறும் இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படலாம்: தூதரகம் எச்சரிக்கை
ADDED : ஜன 07, 2026 06:43 PM

புதுடில்லி: அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் சட்டங்களை மீறினால், நாடு கடத்தப்படுவீர்கள் என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடுமையாக எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் நிர்வாகம், மாணவர் விசா நடைமுறையில் பல்வேறு புதிய மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந் நிலையில் அமெரிக்காவில் சட்டங்களை மீறும் மாணவர்களுக்கு முக்கிய எச்சரிக்கைகளை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டு உள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு;
அமெரிக்காவில் சட்டங்களை மாணவர்கள் மீறினால் மாணவர்கள் விசாக்களை ரத்து செய்வதற்கும், நாடு கடத்தப்படுவதற்கும், எதிர்கால பயணங்களை தொடர முடியாமல் நீண்ட கால தகுதி இழப்புக்கும் வழி வகுக்கும்.
நீங்கள் கைது செய்யப்பட்டாலோ அல்லது ஏதேனும் சட்டங்களை மீறி நடந்து கொண்டாலோ, கைது செய்யப்பட்டாலோ உங்கள் விசாக்கள் ரத்து செய்யப்படலாம். நாடு கடத்தப்படலாம். எனவே விதிகளை பின்பற்றுங்கள், உங்கள் பயணத்தை ஆபத்தில் கொண்டுபோய் விடாதீர்கள்.
அமெரிக்க விசா என்பது ஒரு சலுகையே, அது ஒரு உரிமை அல்ல. விசா வைத்திருப்பவர்கள் உள்ளூர் சட்டங்கள், விதிகளை பின்பற்ற வேண்டும், அதற்கு இணங்கி நடக்க வேண்டும்.
இவ்வாறு அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

