sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாகும்; பியுஷ் கோயல் தகவல்

/

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாகும்; பியுஷ் கோயல் தகவல்

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாகும்; பியுஷ் கோயல் தகவல்

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாகும்; பியுஷ் கோயல் தகவல்

1


ADDED : பிப் 05, 2026 03:23 PM

Google News

1

ADDED : பிப் 05, 2026 03:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் மத்தியில் கையெழுத்தாகும் என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

இது குறித்து நிருபர்களிடம் பியுஷ் கோயல் கூறியதாவது: இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் குறித்த கூட்டறிக்கையை 4-5 நாட்களில் இறுதி செய்து கையெழுத்தாக வாய்ப்புள்ளது. அந்த அறிக்கை கையெழுத்திடப்பட்டதும், அது ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தமாக மாற்றப்படும்.

கூட்டறிக்கை கையெழுத்திடப்பட்ட பிறகு, இந்தியாவுக்கான வரிகளை 18 சதவீதமாகக் குறைப்பது குறித்த நிர்வாக உத்தரவை அமெரிக்கா வெளியிடும். சட்டப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திடுவது, சில அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை இந்தியா குறைப்பதற்கு வழிவகுக்கும். இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் மத்தியில் கையெழுத்தாகும். இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.






      Dinamalar
      Follow us