இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமல்; மத்திய அமைச்சர் தகவல்
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமல்; மத்திய அமைச்சர் தகவல்
ADDED : செப் 25, 2026 07:52 AM

புதுடில்லி: இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முடிந்துவிட்டது; இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அமெரிக்க சந்தையில் சாதகமான சலுகைகள் கிடைக்கும்போது இது முழுமையாக அமல்படுத்தப்படும் என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும், இந்தியாவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் மிக வேகமாகச் செல்கிறது. இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. அமெரிக்க சந்தையில் இந்தியப் பொருட்களுக்குரிய சாதகமான சலுகைகள் உறுதியான பின்னரே ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.
இந்தியாவின் மிக்க துறைகளான விவசாயம் மற்றும் பால்வளத் துறை நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஜி20 வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்லும்போது, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியுடன் இதுகுறித்து மேலும் விவாதிக்கப்பட உள்ளது. இந்தியா ஒன்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது; அதில் அமெரிக்காவுடனான ஒப்பந்தமும் அடங்கும். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
