முதல் நாளில் 336 ரன்கள் சேர்த்த இந்திய அணி: ஜெய்ஸ்வால் 179 ரன் குவிப்பு
முதல் நாளில் 336 ரன்கள் சேர்த்த இந்திய அணி: ஜெய்ஸ்வால் 179 ரன் குவிப்பு
UPDATED : பிப் 02, 2024 04:51 PM
ADDED : பிப் 02, 2024 12:12 PM

விசாகப்பட்டனம்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று விசாகப்பட்டனத்தில் துவங்கியது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக். இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 179 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 14, கில் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
துவக்க வீரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் விளையாடினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் 34 ரன்னில் கேட்சானார். சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய ரஜட் படிதர் (32), அக்சர் படேல் (27) வெளியேறினர். ஸ்ரீகர் பரத் (17) நிலைக்கவில்லை.
ஜெய்ஸ்வால்
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 150 ரன்களை கடந்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 93 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 179 ரன்னுடனும், அஸ்வின் 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நாளை நடைபெறும் 2வது நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் தனது முதல் இரட்டை சதத்தை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

